Saturday 25 October 2014

வெளிநாட்டில் இருந்து வரும் பணத்துக்கு 12.36% சேவை வரி : மத்திய அரசு அதிரடி


வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு
அனுப்பப்படும் பணத்திற்கு பணம்
பெற்றுகொள்வோர் 12.36%
சேவை வரியை செலுத்த வேண்டும்
என்ற மத்திய நிதியமைச்சக உத்தரவால்
பொதுமக்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவை சேர்ந்தவர்கள், சிங்கப்பூர்,
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா,
மலேசியா மற்றும்
வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கில்
பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இந
¢தியாவில் உள்ள குடும்பத்தினருக்கு,
உறவினர்களுக்கு பணம்
அனுப்புவதற்காக முன்பு குருவி,
ஏஜென்ட் ஆகியோரிடம்
பணத்தை கொடுத்து அனுப்பினர். இ
¢வ்வாறு அனுப்பப்படும் பணம் இந்திய
நிதியமைச்சகத்தின் கணக்கில் வராமல்
இருந்தது. இந்த பணம்
ஹவாலா என்று அழைக்கப்பட்டது. இந்த
நடைமுறையில் பணம்
இந்தியாவிற்குள் வரும்போது போதிய
பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. பல
இடங்களில் இந்த பணம்
கொண்டு செல்வதை கண்காணித்து
கொள்ளையடிக்கப்பட்டது.
இதை தடுப்பதற்காக கடந்த சில
ஆண்டுகளுக்கு முன்பு
வெளிநாட்டிலிருந்து பணம்
அனுப்பப்படுவதை மத்திய
நிதியமைச்சகத்தின் வழிகாட்டுதலின்
படி சில நிறுவனங்கள் பணம்
அனுப்புவோரிடம் கமிஷன்
தொகையை பெற்று கொண்டு,
இந்தியாவில் உள்ளவர்களிடம் எவ்வித
கமிஷனும் பெறாமல்
பணத்தை வழங்கி வந்தது.
அதன்படி இந்தியாவில்
வெஸ்டர்ன்யூனியன், எக்ஸ்பிரஸ் மணி,
மணிக¤ராம், ட்ரான்ஸ் ஃபாஸ்ட் ஆகிய
நிறுவனங்கள் மூலை முடுக்கெல்லாம்
தங்கள் நிறுவன கிளைகளை திறந்து
வெளிநாட்டிலிருந்து பணத்தை பெற்று
இந்தியாவில் உள்ளவர்களுக்கு வழங
¢கி வந்தது. அதே நேரத்தில் தேசிய
மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவும்
வெளிநாட்டிலிருந்து அனுப்பும்
பணத்தை இந்தியாவில் உள்ளவர்கள்
பெற்று கொள்ளும்
நடைமுறை இருந்து வந்தது.இதற்காக
இந்த நிறுவனங்கள் குறைந்த பட்ம் 0.6
சதவீதம் முதல் அதிகபட்சமாக 0.9 சதவீதம்
வரை கமிஷன் பெற்று இந்த
சேவையை செய்து வருகிறது. இந்த
நிறுவனங்கள் தங்கள் நிதி வரவில்
ஒரு குறிப்பிட்ட
சதவீதத்தை அரசுக்கு வரியாக
கட்டி வருகிறது. இந்நிலையில் மத்திய
நிதியமைச்சகம் கடந்த 14ம் தேதி முதல்
அனைத்து வங்கிகளுக்கும்,
நிதி நிறுவனங்களுக்கும்
ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது
. அதில், ‘ இனிமேல்
வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு
வரும் எந்த நிதிக்கும் சேவை வரியாக
12.36% விதிக்க வேண்டும்‘ என
உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் நிதி நிறுவன
வட்டாரங¢கள் தெரிவிக்கையில், ‘
வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு
ஆண்டுக்கு 70 பில்லியன் அமெரிக்க
டாலர் வருகிறது. இதன் மூலம்
அரசுக்கு வருமான வரியாக சுமார்
ரூ.350 கோடி வருவாய்
கிடைத்து வருகிறது. ஆனால்
அதைவிட அதிக வருவாய் பெற
வேண்டும் என்பதற்காக நிதியமைச்சகம்
சேவை வரி விதித்தால்
அரசுக்கு கூடுதல் வருவாய்
கிடைக்கும் என்பதை கருத்தில்
கொண்டு சேவை வரியை மத்திய
அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால் பலர்
சேவை வரியை செலுத்துவதற்கு
பதிலாக மீண்டும்
ஹவாலா முறைக்கு மாற
வழிவகுத்து விடும். ஒரு வார
காலமாக சேவைவரியை இந்த
நடைமுறை மூலம் விதிக்கப்படுவதால்
பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பழைய
நடைமுறையை கொண்டு வர மத்திய
நிதியமைச்சகம் முடிவு செய்ய
வேண்டும் என்றனர்.

பால் கொள்முதல் விலையை (Purchasing price ) - 5 ரூபாய் என்றும் விற்பனை விலையை (selling price )-10 ரூபாய் என்றும் பால் விலையை திருத்தி அமைத்தது தமிழக அரசு

பால் கொள்முதல்
விலையை (Purchasing price ) - 5
ரூபாய் என்றும்
விற்பனை விலையை (selling price )-10
ரூபாய் என்றும் பால்
விலையை திருத்தி அமைத்தது தமிழக
அரசு - செய்தி
# ஹ்ம்ம் . சேரி. இந்நேரம்
பாதி பேரு மக்கள் மேல
திடீர்ன்னு அக்கறை பொங்கி வந்து பெரிய
பொருளாதார
வல்லுநரா மாறி இருப்பாங்க.
அவிங்கள பாவம் அவிங்க
போக்குலயே விட்டுடுவோம்.
சரி இந்த பதிவின்
நோக்கத்திற்கு வருவோம்.
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும்
இந்த பால் விலை உயர்விற்கு நிச்சயம்
கண்டனம் தான் தெரிவிக்கும்
ஆளுங்கட்சியைத் தவிர. இதை நாம்
தவறென்றும் சொல்லப்போவதில்லை.
இது அரசியல். அப்படி சொல்லித்தான்
ஆக வேண்டும். ஆக தவறில்லை.
ஆனால் நான் நினைவு படுத்த
விரும்புவதையும் கொஞ்சம்
பொறுமையுடன் படியுங்கள்.
தீவனம் மற்றும்
மாடு எருமை பராமரிப்பு செலவுகள்
அதிகமாயிருபதால் கொள்முதல்
விலையை உயர்த்தி தாருங்கள் என
பால் உற்பத்தியாளர்கள் கடந்த
மூன்று ஆண்டுகளாக
தொடந்து வற்புறுத்தி வருகிறார்கள்
என்பதையும் கவனத்தில் கொள்ள
வேண்டும். அப்படி உயர்த்தி தராததால்
அரசு நிறுவனத்திற்கு பாலைத்
தராமல் தனியார்
நிறுவனங்களை தேடி சென்ற
உற்பத்தியாளர்கள் அநேகம் பேர்
என்பதை மனதில் கொள்ளவும்.
இதற்கிடையில் இந்த ஆண்டில் முதல்
காலாண்டில் 3 ரூபாய் கொள்முதல்
விலையை மட்டும்
உயர்த்தி விற்பனை விலையை உயர்த்தாமல்
சமாளித்தது தமிழக அரசு.
அதற்கு ஆவின் நிறுவனத்தின்
நஷ்டத்தை சமாளிக்க
மாதத்திக்கு கிட்டத்தட்ட 20
கோடி ரூபாய் மானியம்
வழங்கி ஆவின்
நிறுவனத்தை காத்து நின்றது அரசு.
அப்படி இருந்தும் பால் கொடுத்து 45
நாட்களுக்கு பிறகே உற்பத்தியாளர்கள
ுக்கு பணம் கொடுக்க முடிந்தது.
கடந்த மாதம் வரை கிட்டத்தட்ட 200
கோடி ரூபாயை அரசு மானியமாக
ஆவின்
நிறுவனத்திற்கு தந்து அந்நிறுவனத்தை கட்டிக்காத்தது.
மேலும் நிர்வாகத்தை சீரமைக்கவும்
தொடர்ந்து ஆவின் நிறுவனம் மக்கள்
சேவையை தொடரவும் அரசு இந்த
விலை ஏற்றத்தை நடைமுறைப்படுத்த
ி இருக்கிறது. அதுவும் கொள்முதல்
விலையை எட்டு ரூபாய்
எற்றிக்கொடுத்து(முதலில் 3 ரூபாய்
இப்பொழுது 5 ரூபாய்). இதில்
இரண்டு ரூபாய் லாபம் தானே என
நினைக்க வேண்டாம். அதுவும்
நிர்வாக செலவைக் (கொண்டுவருகிற
செலவு, ஆவின் நிறுவன
ஊழியர்களின் ஊதியம், பாக்கெட்
போடுகிற செலவு, மின் கட்டணம் etc .)
சமாளிக்கத் தான்.
ஆக
பொதுமக்களுக்கு சேவையை தொடர்ந்து செய்ய
இந்த
விலை திருத்தி அமைக்கப்பட்டு இருக்கிறதே தவிர
வேறெந்த நோக்கமும் இல்லை.
அதுவுமில்லாமல் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின்
பேராதரவை தொடர்ந்து பெற்று வரும்
இந்த அதிமுக அரசு நிச்சயம் தவறான
முடிவுகளை அதுவும்
மக்களை பாதிக்கும் எந்த செயலையும்
செய்ய முனையாது. மக்களின்
ஆதரவைப்பெறாத சிறு கட்சிகளின்
மக்கள் மீதான் அக்கறையைக்
காட்டிலும் எங்கள் அதிமுக
அரசு மக்களின் மீது மிகுந்த
அக்கறை கொண்டுள்ளது என்பதை நினைவில்
கொள்ளவும்.
ஆவின் நிர்வாகத்தை இன்னும்
சீர்படுத்தி இதுபோன்ற போன்ற
விலையேற்றங்களை முடிந்தவரை இன்னும்
குறைக்கப்பார்க்கலாம் என்கிற
கருத்தை நான் மனமார
வரவேற்கிறேன். அதற்கான
முனைப்பில் இந்த
அரசு இரங்கி இருக்கிறது என்பதையும்
மகிழ்வோடு தெரிவித்துக்
கொள்கிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயம்
அதிமுகவினருக்கும் இந்த பால்
விலையேற்றம் பொருந்தும். எந்த
அதிமுகவினருக்கும் குறைந்த
விலையில் பால் கிடைக்காது.
அதையும் மனதில் வைத்து உங்கள்
அரசியலை தொடந்து நடத்துங்கள். இந்த
பதிவே கூட விலையேற்றத்திற்
கு வக்காலத்து வாங்கும் நோக்கில்
பதியப்படவில்லை. என்ன
நிலை என்பதை எடுத்துரைக்கவே எழுதப்பட்டுள்ளத
ு.

பால் கொள்முதல் விலையை (Purchasing price ) - 5 ரூபாய் என்றும் விற்பனை விலையை (selling price )-10 ரூபாய் என்றும் பால் விலையை திருத்தி அமைத்தது தமிழக அரசு

பால் கொள்முதல்
விலையை (Purchasing price ) - 5
ரூபாய் என்றும்
விற்பனை விலையை (selling price )-10
ரூபாய் என்றும் பால்
விலையை திருத்தி அமைத்தது தமிழக
அரசு - செய்தி
# ஹ்ம்ம் . சேரி. இந்நேரம்
பாதி பேரு மக்கள் மேல
திடீர்ன்னு அக்கறை பொங்கி வந்து பெரிய
பொருளாதார
வல்லுநரா மாறி இருப்பாங்க.
அவிங்கள பாவம் அவிங்க
போக்குலயே விட்டுடுவோம்.
சரி இந்த பதிவின்
நோக்கத்திற்கு வருவோம்.
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும்
இந்த பால் விலை உயர்விற்கு நிச்சயம்
கண்டனம் தான் தெரிவிக்கும்
ஆளுங்கட்சியைத் தவிர. இதை நாம்
தவறென்றும் சொல்லப்போவதில்லை.
இது அரசியல். அப்படி சொல்லித்தான்
ஆக வேண்டும். ஆக தவறில்லை.
ஆனால் நான் நினைவு படுத்த
விரும்புவதையும் கொஞ்சம்
பொறுமையுடன் படியுங்கள்.
தீவனம் மற்றும்
மாடு எருமை பராமரிப்பு செலவுகள்
அதிகமாயிருபதால் கொள்முதல்
விலையை உயர்த்தி தாருங்கள் என
பால் உற்பத்தியாளர்கள் கடந்த
மூன்று ஆண்டுகளாக
தொடந்து வற்புறுத்தி வருகிறார்கள்
என்பதையும் கவனத்தில் கொள்ள
வேண்டும். அப்படி உயர்த்தி தராததால்
அரசு நிறுவனத்திற்கு பாலைத்
தராமல் தனியார்
நிறுவனங்களை தேடி சென்ற
உற்பத்தியாளர்கள் அநேகம் பேர்
என்பதை மனதில் கொள்ளவும்.
இதற்கிடையில் இந்த ஆண்டில் முதல்
காலாண்டில் 3 ரூபாய் கொள்முதல்
விலையை மட்டும்
உயர்த்தி விற்பனை விலையை உயர்த்தாமல்
சமாளித்தது தமிழக அரசு.
அதற்கு ஆவின் நிறுவனத்தின்
நஷ்டத்தை சமாளிக்க
மாதத்திக்கு கிட்டத்தட்ட 20
கோடி ரூபாய் மானியம்
வழங்கி ஆவின்
நிறுவனத்தை காத்து நின்றது அரசு.
அப்படி இருந்தும் பால் கொடுத்து 45
நாட்களுக்கு பிறகே உற்பத்தியாளர்கள
ுக்கு பணம் கொடுக்க முடிந்தது.
கடந்த மாதம் வரை கிட்டத்தட்ட 200
கோடி ரூபாயை அரசு மானியமாக
ஆவின்
நிறுவனத்திற்கு தந்து அந்நிறுவனத்தை கட்டிக்காத்தது.
மேலும் நிர்வாகத்தை சீரமைக்கவும்
தொடர்ந்து ஆவின் நிறுவனம் மக்கள்
சேவையை தொடரவும் அரசு இந்த
விலை ஏற்றத்தை நடைமுறைப்படுத்த
ி இருக்கிறது. அதுவும் கொள்முதல்
விலையை எட்டு ரூபாய்
எற்றிக்கொடுத்து(முதலில் 3 ரூபாய்
இப்பொழுது 5 ரூபாய்). இதில்
இரண்டு ரூபாய் லாபம் தானே என
நினைக்க வேண்டாம். அதுவும்
நிர்வாக செலவைக் (கொண்டுவருகிற
செலவு, ஆவின் நிறுவன
ஊழியர்களின் ஊதியம், பாக்கெட்
போடுகிற செலவு, மின் கட்டணம் etc .)
சமாளிக்கத் தான்.
ஆக
பொதுமக்களுக்கு சேவையை தொடர்ந்து செய்ய
இந்த
விலை திருத்தி அமைக்கப்பட்டு இருக்கிறதே தவிர
வேறெந்த நோக்கமும் இல்லை.
அதுவுமில்லாமல் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின்
பேராதரவை தொடர்ந்து பெற்று வரும்
இந்த அதிமுக அரசு நிச்சயம் தவறான
முடிவுகளை அதுவும்
மக்களை பாதிக்கும் எந்த செயலையும்
செய்ய முனையாது. மக்களின்
ஆதரவைப்பெறாத சிறு கட்சிகளின்
மக்கள் மீதான் அக்கறையைக்
காட்டிலும் எங்கள் அதிமுக
அரசு மக்களின் மீது மிகுந்த
அக்கறை கொண்டுள்ளது என்பதை நினைவில்
கொள்ளவும்.
ஆவின் நிர்வாகத்தை இன்னும்
சீர்படுத்தி இதுபோன்ற போன்ற
விலையேற்றங்களை முடிந்தவரை இன்னும்
குறைக்கப்பார்க்கலாம் என்கிற
கருத்தை நான் மனமார
வரவேற்கிறேன். அதற்கான
முனைப்பில் இந்த
அரசு இரங்கி இருக்கிறது என்பதையும்
மகிழ்வோடு தெரிவித்துக்
கொள்கிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயம்
அதிமுகவினருக்கும் இந்த பால்
விலையேற்றம் பொருந்தும். எந்த
அதிமுகவினருக்கும் குறைந்த
விலையில் பால் கிடைக்காது.
அதையும் மனதில் வைத்து உங்கள்
அரசியலை தொடந்து நடத்துங்கள். இந்த
பதிவே கூட விலையேற்றத்திற்
கு வக்காலத்து வாங்கும் நோக்கில்
பதியப்படவில்லை. என்ன
நிலை என்பதை எடுத்துரைக்கவே எழுதப்பட்டுள்ளத
ு.

Friday 24 October 2014

சிக்கன்-65 சாப்பிட விருப்பமா?

# சிக்கன்-65 சாப்பிட விருப்பமா?
முதலில் இதை கவனமாக படியுங்கள் !
# Chicken-65 சிவப்பு நிறத்தில்
மொறு மொறு என்று பார்த்தாலே சாப்பிட
வேண்டும் என்று ஆவலைத் தூண்டும்
உணவு சிக்கன் 65. கடந்த 20 ஆண்டுகளாக
தமிழ்நாட்டில் பிரபலமடைந்து வரும் இந்த
உணவு கோழிக்
கறியை வறுத்து செய்யப்படுகிறது.
சிக்கன் 65 கண்ணைக் கவரும் விதத்தில்
கலராக தெரியவேண்டும் என்பதற்காக
சேர்க்கப்படும் பொடியில் உள்ள ரசாயனம்
மனித உடலுக்கும், குடலுக்கும்
ஆபத்தை ஏற்படுத்தக்கூடி
யது என்று கண்டறியப்பட்டுள்ளது.
சிக்கன் 65 அதிகமாக சாப்பிடுபவர்களு
க்கு சிறுநீரக கோளாறுகள்,
மரபணு பாதிப்புகளும் ஏற்படும்
என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
அதேபோல் ரசாயனம் கலந்த மாமிச
உணவுகளை அதிக வெப்பத்தில்
சமைத்து உண்பதால் புற்றுநோய்
பாதிப்பு ஏற்படும் அபாயம்
உள்ளது என்றும் மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்.
செயற்கை நிறங்கள் உணவு வகைகளில்
பயன்படுத்தக் கூடிய செயற்கை நிறங்கள்,
பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள்
என உண்டு. இந்தியாவில் 8 வகையான
செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப்
பொருட்களில் பயன்படுத்த
அணுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும்
ஒரு குறிப்பிட்ட
அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எட்டு வகையான நிறங்களை ஐஸ்கிரீம்
ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட்,
இனிப்பு வகைகள், டின்களில்
அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள்,
பாட்டில் பழ ஜூஸ் வகைகள்,
குளிர்பானங்கள் என ஏழு வகையான
உணவுகளில் மட்டுமே சேர்க்க
அனுமதி உண்டு. ஆனால் இதை யாரும்
கடை பிடிப்பதில்லை.
அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில்
அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல்
செயற்கை நிறங்களைச் சேர்த்தால்
உடலுக்கு பாதிப்பு ஏற்படும்
என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால்
உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல்,
அமிலத்தன்மை அதிகரிப்பால்
இரைப்பை அழற்சி ஏற்படும் என்று பிரபல
குடல்நோய் நிபுணர்
கருத்து தெரிவித்துள்ளார்.
கழுத்துக் கழலை நோய்
சிக்கன் 65ல் துணிகளுக்கு சாயம் ஏற்றப்
பயன்படும் சூடான் டை, மெட்டானில்
எல்லோ ரசாயனம் சேர்க்கப்படுகிறது.
இதுவே குடல் புற்றுநோய்,
சிறுநீராகக் கோளாறு,
மரபணு கோளாறுகளை ஏற்படுத்துகின்ற
னவாம். அதேபோல் உணவில்
சிவப்பு நிறத்தை கொடுக்க
பயன்படுத்தப்படும் எரித்ரோசின்
அளவு கூடினால் கழுத்துக்
கழலை நோய் ஏற்படும் என்றும்
மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த
செயற்கை நிறங்களை இனிப்புகளில்
மட்டுமே சேர்க்கவேண்டும்.
காரவகைகளில் சேர்க்க
அனுமதி கிடையாது.
மக்களின் மனதில் உணவைவிட உணவின்
நிறம்தான்
பளிச்சென்று பதிந்து உள்ளது. சிக்கன் 65
என்றால் சிவப்பு நிறமாக
இருக்கவேண்டும் என்றும்,
அப்படி இருந்தால் மட்டுமே சிக்கன் 65
என்றும் நினைக்கின்றனர்.
இதனை கருத்தில்
கொண்டே வியாபாரிகளம் சிக்கன் 65
நிறத்தைக் கூட்டி,
ஆபத்தை அறியாமலேயே வியாபாரம்
செய்கின்றனர்.
சிறுவர்களுக்கு ஆபத்து
கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும்,
அமெரிக்காவிலும் சூடான்
டையை உணவில் பயன்படுத்தத்
தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம்
கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த
உணவை எலிகளுக்குக்
கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில்
எலிகளின் சிறுநீரகங்களிலும்
கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.
எனவே இதுபோன்ற ரசாயனம் கலந்த
உணவுகளை சிறுவர்கள் கண்ணில் கூட
காட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்
மருத்துவர்கள்.
இதேபோல் ரசாயனம்
கலந்து பதப்படுத்தப்பட்டுள்ள
பன்றி இறைச்சி,
கோழிக்கறி போன்றவைகளை அதிக
வெப்பத்தில் சமைத்து உண்பதாலும்
புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்
என்று உணவியல் நிபுணர்கள்
எச்சரித்துள்ளனர். கிரில்டு சிக்கன்
சாப்பிடுவதும்
ஆபத்து என்று கூறி சிக்கன்
பிரியர்களை அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.

எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அவசியமா?

எட்டாம் வகுப்பு வரை கட்டாய
தேர்ச்சி அவசியமா?
மாநிலங்களின்
கருத்தை கேட்கிறது மத்திய அரசு
இலவச மற்றும் கட்டாயக்
கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) படி,
'எட்டாம் வகுப்பு வரை கட்டாய
தேர்ச்சி'
என்ற நிலையால், அந்தந்த
வகுப்பிற்குரிய
திறனை பெறாமல், அடுத்தடுத்த
வகுப்புகளுக்கு மாணவர்
வந்துவிடுவதால், பெரிய
வகுப்புகளில்,
மாணவர் திணறும்
நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கட்டாய தேர்ச்சியின்
அவசியம்
குறித்து, மாநில அரசுகள்,
கருத்து தெரிவிக்குமாறு, மத்திய
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
கேட்டுள்ளது.ஆர்.டி.இ., சட்டத்தில்,
எட்டாம் வகுப்பு வரை, கட்டாயம்
தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என,
கூறப்பட்டு உள்ளது.
இதை அப்படியே வேத வாக்காக
எடுத்துக்
கொண்டு,
அனைத்து மாணவர்களையும்,
அடுத்தடுத்த வகுப்புகளுக்கு,
'புரமோட்'
செய்து விடுகின்றனர். குறிப்பாக,
அரசு பள்ளி ஆசிரியர்கள்,
இப்படி செய்கின்றனர்.
ஆனால், தனியார்
பள்ளிகள், சரியாக படிக்காத
மாணவருக்கு,
சிறப்பு பயிற்சி அளித்து, தனியாக
சிறப்புத்
தேர்வை நடத்தி, அதில் தேறினால்,
அடுத்த
வகுப்பிற்கு, 'புரமோட்'
செய்கிறது....