Saturday 11 May 2013

anna

கேம்பஸ் இன்டர்வியூ: சில உண்மைகள்...! சில எச்சரிக்கைகள்..!


‘கேம்பஸ் இன்டர்வியூ’ -

 இன்றைய சூழலில் ஒரு மாணவனின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது இந்த மந்திரச் சொல்தான்
 மாணவர்களுக்கு மட்டுமல்ல... 
கல்லூரிகளுக்கும் மாணவர்களைக் கவர அதுதான் தூண்டில் முள்!

'எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு வளாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்தித்தான் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களைச் சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் முன்னரே பணி நியமனத்துக்கான அப்பாயின்மென்ட் ஆர்ட ரைக் கையில் வாங்கும் இந்த கேம்பஸ் மோகத் தில் மாணவர்களும் பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் மயக்கத்தில் மருந்து தெளித்திருக்கிறது அண்மையில் வெளியான அந்தச் செய்தி.

'கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஹெச்.சி.எல். நிறுவனத்தில் பணி நியமன ஆணை பெற்றும் ஆண்டுக்கணக்கில் பணி நியமனத்துக்காகக் காத்திருக்கும் 59 மாணவர்கள் சென்னையில் உண்ணாவிரதம்.’

சென்னை தவிர... பெங்களூரு, நொய்டா, டெல்லி என நாட்டின் பல பகுதிகளிலும் இதே போன்ற போராட்டங்களை மாணவர்கள் நடத்தத் தொடங்கியுள்ளனர். ''அப்பாயின்மென்ட் ஆர்டரை மட்டும் வைத்துக்கொண்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறோம். இதனால் வேறு வேலைக்கும் செல்ல முடிய வில்லை. எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள்'' என்ற அவர்களின் கோபம் மிக நியாயமானது. கேம்பஸ் இன்டர்வியூ என்ற ஜிகினா பொம்மையின் உண்மை முகம் என்ன? கேம்பஸில் தேர்வாகியும் வேலை கிடைக்கத் தாமதம் ஆவது ஏன்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரிப வரும், 'சேவ் தமிழ்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான செந்தில்.

''கேம்பஸ் இன்டர்வியூ என்பது ஏதோ மாணவர்களுக்கு நல்லது செய்யும் சேவை போன்ற பிம்பம் இருக்கிறது. ஆனால், வளாக நேர்முகத் தேர்வு மூலம் நிறுவனங்களுக்குத் தான் லாபம் அதிகம். அவர்கள் தங்களுக்குத் தேவையான, தகுதியான ஊழியர்களை எந்த அலைச்சலும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்து சலித்து எடுத்துக்கொள்கிறார்கள். கல்லூரிகளைப் பொறுத்தவரை டோட்-1 கல்லூரிகள், டோட்-2 கல்லூரிகள் என இரண்டு வகை உண்டு (DOTE -Directorate Of Technical Education). டோட்-1 என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள். டோட்-2 என்பவை தனியாரால் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள். பன்னாட்டு நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப் பிரியப்பட்டு ஆர்வமுடன் வருவது டோட்- 1 கல்லூரிகளுக்குத்தான். டோட்- 2 கல்லூரிகளுக்கு கெஞ்சிக் கூத்தாடித்தான் கேம்பஸ் இன்டர்வியூவுக்கு நிறுவ னங்களை அழைத்து வர வேண்டும். இந்த டோட்-2 கல்லூரி வளாகத் தேர்வுகளில் தேர்வா கும் மாணவர்களுக்குத்தான் தற்போது சிக்கல்!

டோட்-2 கல்லூரி மாணவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, கிராமப்புற மாணவர்களாக இருப்பார்கள். எப்படியேனும் பொறியியல் படித்தால் எதிர்காலம் வளமாகிவிடும் என்று நம்பி சொத்துக்களை விற்றுப் படிக்கவைக்கப்படுபவர்கள். இவர்கள் நன்றாகப் படிப்பவர்கள்தான். அதனால்தான் கேம்பஸில் தேர்வாகியுள்ளனர். ஆனாலும், நிறுவனங்கள் இவர்களை மட்டும் அலைக்கழிப்பது ஏன்?

அதைத் தெரிந்துகொள்ள ஐ.டி. நிறுவனங்கள் செயல்படும் முறையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஐ.டி. நிறுவனங்களைப் பொறுத்தவரை ஊழியர்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கு ஒரு சொத்துதான். 'எங்களிடம் 2 லட்சம் ஊழியர் கள் இருக்கிறார்கள்... 3 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள்’ என்று கணக்கு காட்டித்தான் நிறுவனங்கள் புராஜெக்ட் பிடிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் பல்லா யிரம் பேரை வேலைக்கு எடுக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்கப் பொருளாதாரத் தேக்க நிலை, ஐரோப்பியப் பொருளாதார வீழ்ச்சி எனப் பல காரணங்களால் எதிர்பார்த்த அளவில் புராஜெக்ட்கள் கிடைக்காமல் போகலாம். அத்தகைய சூழலில் நிறுவனங்கள், மூத்த ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்ப முடியாது என்பதால், புதிய ஊழியர் களை வேலைக்கு எடுப்பதைத் தள்ளிப் போடு கின்றன. அல்லது வேலைக்கே எடுக்காமல் தட்டிக்கழிக்கின்றன. அப்படியே வேலைக்கு எடுத்தாலும் முதலில் டோட்-1 கல்லூரிகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, இறுதியாகவே டோட்-2 கல்லூரிகளுக்கு வருகிறார்கள். சென்னை, கோவை, மதுரை போன்ற முதல் நிலை நகரங்களில் இருக்கும் கல்லூரிகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, இரண்டாம் நிலை நகரங்களை ஒதுக்குகின்றனர் என எளிமையாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். இதுதான் தற்போதைய பிரச்னையின் நதி மூலம்!'' என்கிறார் செந்தில். 

ஹெச்.சி.எல். நிறுவனத்தில் மட்டும் இன்றைய நிலையில் இந்தியா முழுவதும் சுமார் 6,000 பேர் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வேலையில் அமர்த்தப்படாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க ஃபேஸ்புக்கில் 'நாலெட்ஜ் புரொஃபஷனல்ஸ் ஃபோரம்’ என்ற பெயரில் குழு ஒன்று இயங்குகிறது. அந்தக் குழுவைச் சேர்ந்த சுதிர் என்பவரிடம் பேசியபோது...

''ஒருமுறை கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொண்டு ஒரு நிறுவனத்தில் தேர்வாகிவிட்டால், கல்லூரி முடியும் வரை வேறு நிறுவனத்தின் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொள்ள முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது. ஆனால், திறமை காரணமாக முதல் முயற்சியிலேயே ஆர்டர் வாங்கியவர்கள் வருடக்கணக்கில் காத்திருக்க... அதன் பிறகு கேம்பஸில் தேர்வானவர்கள் நல்ல வேலையில் சேர்ந்துவிட்டனர். இவர்கள் ஏமாளிகளாகக் காத்திருக்கிறார்கள். வேறு நிறுவனங்களுக்கு வேலைக்குப் போனால் 'நீங்க ஃப்ரெஷ்ஷரா அல்லது அனுபவசாலியா?’ என்று கேட்பார் கள். ஃப்ரெஷ்ஷர் என்றால் பிரச்னை இல்லை. வேலையில் சேர்ந்துவிடலாம். 'வேலைக்காக வெட்டியாகக் காத்திருந்தேன்’ என்று சொன்னால், எந்த நிறுவனத்திலும் உடனே வேலை தர மறுப்பார்கள். ஒவ்வொரு கல்லூரியிலும் நன்றாகப் படிக்கும் மிகச் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கையை மறை முகமாகச் சிதைக்கும் போக்கு இது!'' என்று கேம்பஸ் இன்டர்வியூவின் அதிர்ச்சியான மறுபக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறார் சுதிர்.

எனில், இதில் கல்லூரிகளின் பொறுப்பு என்ன? கேம்பஸ் மூலம் தேர்வான மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், அது கல்லூரியின் நற்பெயருக்குக் களங்கம்தானே! அதற்காகவேனும் அவர்கள் இதில் தலையிடலாம் தானே என்று கேட்கலாம். ஆனால், யதார்த்தம் என்னவெனில், கல்லூரிகளே நிறுவனங்களை கெஞ்சிக் கூத்தாடித்தான் கேம்பஸ் இன்டர்வியூ வுக்கு அழைத்துவருகின்றன. ஆகவே, 'எங்கள் மாணவர்களுக்கு ஏன் வேலை கொடுக்கவில்லை?’ என்று கேட்க முடியாது. கேட்டால், அடுத்த ஆண்டு கேம்பஸுக்கு வர மாட்டார் கள். இதனால் கல்லூரிகள் இதைப்பற்றிக் கண்டுகொள்வது இல்லை. ஆனால், எந்தக் கூச்சமும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 'எங்கள் கல்லூரி யில் இருந்து இவ்வளவு பேர் கேம்பஸ் மூலம் தேர்வாகியுள்ளனர்’ என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள். அதில் எத்தனை பேர் வேலையில் சேர்ந்துள்ளனர் என்று கேட்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.

எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்தது எப்படி..?

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மக்கள் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்த தினத்தன்று நடந்தவைகள் பற்றி ஜூனியர்விகடனில் அண்ணன் செளபா எழுதிய நேர்முக வர்ணனை இது :


முதல்வருக்குக் கீழே வரிசையாய்ப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த ஆர்.எம்.வீ. உட்பட அமைச்சர்கள் அனைவரும் எழுந்தனர். படிக்கட்டுகளைத் தாண்டி, பிரதமர் ராஜீவ் கூட்டத்துக்குள் இருந்து வந்தார். மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு, முதல்வரைப் பார்த்தபடியே சற்று நேரம் நின்றார். பிரதமர் புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், கடற்படை வீரர்கள் மலர் வளையத்தோடு.. ஒரு தட்டு நிறையப் பூக்களுடனும் முன்வர, ஜனாதிபதி வெங்கட்ராமன் தன் துணைவியாருடன் வந்தார். அவரைத் தொடர்ந்து கவர்னர்... இப்படி ஒரே வி.ஐ.பி-க்கள் மயமாய் இருந்தது.


தன் புதல்வர்கள் ராம்குமார், பிரபுவுடன் வந்த சிவாஜி கணேசன், பண்ருட்டி ராமச்சந்திரனைத் தழுவிக் கொண்டு அழுதார். குழந்தைபோலத் தேம்பியபடி, ''இன்னிக்கா, நேத்திக்கா... நாப்பது வருஷமா அண்ணன் தம்பியா இருந்தோமே... 'எதுன்னாலும் நீ என்னை வந்து பார்... ஏன் நீ வர மாட்டேங்கறே?’ன்னாரே... இனி நான் யார்கிட்ட போவேன்?'' என்று சிவாஜி குமுறிக்கொண்டு இருந்தபோது, ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் மண்டபத்துக்குள் நுழைந்தார். அடுத்த சில நிமிடங்களில் கருப்பையா மூப்பனார், பழனியாண்டி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் வந்து சேர்ந்தனர்.

ஓர் அ.தி.மு.க பிரமுகர் ஆர்.எம்.வீ-யிடம் வந்து, ''ரஷ்யாவில் லெனினின் உடலை ரசாயனத் திரவத்தில் வைத்திருக்கிற மாதிரி, தலைவர் உடலையும் வைக்கணும். சென்னையிலேயே ஒருவர், தான் அப்படிச் செய்து தருவதாகப் பல முறை கல்வி அமைச்சருக்கு பெட்டிஷன் கொடுத்து இருக்கிறார்...'' என்றார்.

சற்று யோசனையுடன் இருந்த ஆர்.எம்.வீ., ''அதெல்லாம் வேண்டாம்... தலைவர் அதை விரும்ப மாட்டார். அண்ணாவைப்போல, சந்தனப் பெட்டிக்குள் வைத்தே அடக்கம் செய்யலாம்!'' என்றார். அந்தப் பிரமுகர் விடாப்பிடியாக, ''சந்தனப் பெட்டி நாட்பட நாட்படக் கரைஞ்சு போகும். நாம் கண்ணாடிப் பெட்டியில் ரசாயனத் திரவத்துக்குள் தலைவரைவெச்சு, அதை சந்தனப் பெட்டிக்குள் வைத்துவிட்டால், உடல் அப்படியே இருக்கும்!'' என்றார்.

சற்று யோசித்த ஆர்.எம்.வீ., ''எக்ஸ்பெரிமென்டலா எதையும் செய்ய முடியாது. முறையல்ல... அதெல்லாம் வேண்டாம்!'' என்று மறுத்தார். பின்னர் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீ., பண்ருட்டி ராமச்சந்திரன் அடங்கிய குழு ஒன்று, முதல்வர் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்தைப் பார்வையிடக் கிளம்பியது.


போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ஜெயலலிதாவிடம் சென்று, ''காலையில இருந்து நின்னுட்டே இருக்கீங்க... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்...'' என்றார். ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. நின்ற இடத்திலேயே அசையாமல் இருந்தார்.

முதல்வரின் நெருங்கிய உறவினர்களை அழைத்தார் டி.ஜி.பி. ரவீந்திரன்! ''இறுதிச் சடங்குகள் குடும்ப வழக்கப்படிதானே...?'' என்றார். அவர்கள், ''ஆம்'' என்றதும், ''நீங்க இப்போ தோட்டத்துக்குப் புறப்படுங்க... நாளை மதியம் இரண்டு மணிக்கே அடக்கம் செய்யும் இடத்துக்கு வந்துடுங்க. நீங்க மறுபடியும் நாளைக்கு இங்க வந்து ஊர்வலத்தில் மாட்டிக்க வேண்டாம்!'' என்று, அவர்களை ராமாவரம் அனுப்பிவைத்தார்.

திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர்.

ஒரு காவல் துறை அதிகாரியிடம், ''அவரை உயிரோட பார்க்கவுல வந்தேன்... என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க... என் சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்ப மாட்டேன்!'' என்று இரு கைகளாலும் மாறி மாறி அடித்துக்கொண்டு கதறினார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். இப்படி ஆயிரக்கணக்கானோர் மறுநாள் மதியம்வரை சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் நத்தையாய் நகரும் வரிசையில் காத்துக் கிடந்தனர். திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து எழிலகம்வரை வரிசை இருந்தது.


வெளியூரில் இருந்து வந்திருந்த பெண்மணி ஒருவர், ''நாங்க தவமிருந்து பெத்த தலைப் புள்ளை போயிடுச்சே... எங்க குல தெய்வத்தின் உசிரே கொள்ளை போயிடுச்சே... ஐயா, ஐயா...'' என்று கதறினார். கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க நின்ற ஓர் இளம்பெண், ''இனி எங்களுக்குன்னு யாரு இருக்கா, எங்களை அனாதையாத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு புரட்சித் தலைவரு...'' என்று விசும்பினார்!

கோவையில் இருந்து மருத்துவப் பல்கலைக்கழக விழாவுக்கென்று பஸ் பிடித்து வந்திருந்த ஒரு குழுவிடம் எழிலகம் அருகே பேச்சுக் கொடுத்தோம். நா தழுதழுக்கச் சொன்னார்... ''அடிமட்டத் தொண்டனை மதிச்ச கடவுள்ங்க அவரு... நாங்க இன்னும் நம்ப மாட்டோமுங்க... பல தடவை ஆன மாதிரி இதுவும் வதந்தியாப் போயிடணுமுங்க... இதே செய்தி எங்க ஊர்ல இருந்து கேட்டிருந்தா, நம்ப மாட்டோமுங்க... இது இப்பவும் வதந்தியாப் போவணுமுங்க...'' என்று குமுறிக் குமுறி அழுதார் அந்த அ.தி.மு.க. தொண்டர்!

ராஜாஜி ஹாலில் முதல்வரின் உடல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட அதே சமயம், நாவலர் மற்றும் உயர் அதிகாரிகள், சமாதிக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க மெரினா பீச் வந்தார்கள். முதலில் ஐ.ஜி. ஆபீஸ் எதிரே போய்ப் பார்த்து, எந்த இடத்தில் எந்த அமைப்பில் சமாதி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்தார் நாவலர். ஆனால், உள்துறைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன் மற்றும் ஜேப்பியார் போன்றோர், ''அண்ணாவின் இதயக்கனி என்று பெயர் வாங்கியவர் தலைவர். அவரை அண்ணா சமாதிக்கு அருகில்தான் புதைக்க வேண்டும்...'' என்று வாதிட்டார்கள். பின்னர் நாவலரும் சம்மதித்து அண்ணா சமாதி அருகே வந்து இடம் தேர்ந்தெடுத்தார்.

இடம் தேர்ந்தெடுத்த அரை மணி நேரத்தில், பொதுப் பணித் துறையின் பணியாளர்கள் வெகுவேகமாகச் செயல்பட்டார்கள். ஆனால், வியாழன் மதியம் தொடங்கிய வேலை, வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் முடிந்தது. உள்துறைச் செயலாளரும், டி.ஜி.பி-யும் அடிக்கடி வந்து மேற்பார்வையிட்டு வேலையைத் துரிதப்படுத்தினர்.

முதல்வரின் உடல் மெரினா வரும் முன்பே லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்... ஆயிரக்கணக்கில் போலீஸ்...

டிரக்கில் இருந்து முதல்வரின் உடலைக் கீழே இறக்கும் சமயம், சுற்றியிருந்த கும்பல் நெருக்கியடித்துக் கொண்டு சமாதி அருகில் வரத் துடித்தது. சமாதியை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஓடி வர, போலீஸாரில் ஒரு பிரிவினரான குதிரைப் படை அவர்களை அடக்கப்படாதபாடுபட்டது. முடியவில்லை. எனவே, கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது. ''அடப் பாவிங்களா... தலைவரைப் பார்க்க வந்தவங்க கண்ணைக் குருடாக்கப் பார்க்கறீங்களா...'' என்று குரலெழுப்பியவாறு மண்ணையும் கற்களையும் எறிந்தனர். இந்தக் களேபரத்தில் சிலர் சமாதி அருகே வந்து, ''வாத்யாரே... தெய்வமே... அப்பா...'' என்றெல்லாம் கதறித் துடித்தார்கள். வேறு வழி இல்லாமல் போலீஸார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கித் தூரமாய் எறிய வேண்டி வந்தது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீஸ் துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது. ஆவேசமாக வந்த கூட்டம்... ''தலைவனை வெச்சிருக்கிற இடத்துலே உயிரைவிட்டா, அதுவே போதும்... சுடுங்க...!'' என்று அலற, போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டி வந்தது.


சுமார் 3.40-க்கு முதல்வரின் உடல் வந்து சேர்ந்தது. உடனே மத்திய அமைச்சர் சிதம்பரமும் அருகில் சென்றார். உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் தன் சட்டையில் இருந்து சென்ட் பாட்டிலை எடுத்து சந்தனப் பேழையில் தெளித்தார். தொடர்ந்து முதல்வரின் உடல் மீதும் மரியாதையுடன் தெளித்தார். ''சி.எம்.மோட ஃபேவரிட் பிராண்ட்...'' என்று முணுமுணுத்தார்.

அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின், முதல்வரின் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. அவரின் உடை கொஞ்சமும் கசங்காமல் காணப்பட்டது. வலது கையில் ஒரு மோதிரமும் வாட்ச்சும் இருந்தது. ஓர் அமைச்சர், ''எதையும் கழட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க...'' என்றார். ''கழட்ட வேண்டாம்'' என்று பலரும் கோரஸாகக் கத்தினார்கள். அப்படியே உடல் பேழைக்குள் வைக்கப்பட்டது.

தொடர்ந்து உள்துறைச் செயலாளர் ''எல்லோரும் பார்த்தாகிவிட்டதா?'' என்று கேட்கும்போதே என்.டி.ஆர்., ''எம்.ஜி.ஆர்!'' என்று உணர்ச்சிகரமாகக் குரல் கொடுத்தபடியே பேழையை மூட, ''வாழ்க!'' என்ற கோஷம் எதிரொலிக்க, கூடியிருந்த அமைச்சர்கள் சிலர் கலங்கிப் போய் ''ஏன் மூடினீங்க... திறங்க... தலைவர் முகத்தைக் கடைசியா ஒரு தடவை பார்க்கணும்...'' என்று கதறினார்கள். குறிப்பாக ராஜாராமும் ஆர்.எம்.வீ.யும், ''திறங்க...'' என்றார்கள் உரக்க!

ஆனால், டி.வி.வெங்கட்ராமன், ''வேணாம் சார்... ஒரு முறை மூடிட்டா திரும்பத் திறக்கக் கூடாது... அது சம்பிரதாயம்...'' என்றார். இப்போது வீரப்பனுடன் சௌந்தரராஜனும் சேர்ந்து, ''ப்ளீஸ்... கடைசியா ஒரு தடவை பார்த்து விடுகிறோம்...'' என்று கெஞ்சினார்கள். உடனே உள்துறைச் செயலாளர் கையெடுத்துக் கும்பிட்டு, ''வேணாங்க... சம்பிரதாயப்படி மூடப்பட்ட பெட்டியைத் திரும்பத் திறக்கக் கூடாது... நான் நல்லதுக்குதான் சொல்றேன்...'' என்று சொன்னார். அத்துடன், ''உம்! சந்தனக் கட்டையை எடுங்கப்பா...'' என்று குரல் கொடுக்க, துண்டு துண்டாய் இருந்த சந்தனக் கட்டைகள் ஆளுக்கொன்றாய் கொடுக்கப்பட்டன.

பிறகு, ராணுவம் மற்றும் போலீஸ் மரியாதை... குண்டுகள் முழங்க, பேழைக் குழியினுள் இறக்கப்பட்டது. சௌந்தரராஜன் தன் மடியில் வைத்து இருந்த புனித கங்கை நீர்ச் செம்பை உடைத்துக் குழியில் தெளித்தார். மற்றவர்கள் அழுது கொண்டே சந்தனக் கட்டைகளைப் போட்டார்கள்.

டி.ஜி.பி. ரவீந்திரன், ''உப்பு...'' என்று குரல் கொடுத்தார். எல்லார் கைக்கும் உப்பு வந்தது. கடைசியாகப் பளிங்குக் கல் கொண்டு வரப்பட்டு, அந்த மாமனிதரின் கல்லறை மூடப்பட்டது.

உள்துறைச் செயலாளர் தன் பாக்கெட்டில் இருந்து சூடம் எடுத்து சௌந்தரராஜனிடம் கொடுக்க, அவர் அதைக் கொளுத்தினார். ஒவ்வொருவராய் சூடத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள்

































Thursday 9 May 2013

Iron Man 3


Iron Man 3 (2013) - English - 720p - x264 - AC3 - 1GB - Torrent - Download - http://adf.ly/OjKp5

Audio/Video is Good.



Vishwaroopam

Vishwaroopam (2013) - AP International - BluRay - Untouched - AVC - DTS - HD MA - 1080P - Torrent - Download - http://adf.ly/OjSU2


Udhayam NH4

Udhayam NH4 (2013) - Tamil - LotusFiveStar - DVD Untouched - DTS 5.1Ch - Torrent - Download - http://adf.ly/OjWWiPhoto: Udhayam NH4 (2013) - Tamil - LotusFiveStar - DVD Untouched - DTS 5.1Ch - Torrent - Download - http://adf.ly/OjWWi

invented Exams

Henry Fishel Who invented Exams.... 





Photo: Henry Fishel Who invented Exams.... Intha nallavara enna pannalaam 4nds....


Intha nallavara enna pannalaam 4nds....

Wednesday 8 May 2013

Yaaruda Mahesh (2013)

Yaaruda Mahesh (2013) - Tamil - Real TC - XviDPhoto: Yaaruda Mahesh (2013) - Tamil - Real TC - XviD - Mp3 - 1GB - Torrent - Download - http://adf.ly/OatGw - Mp3 - 1GB - Torrent - Download - http://adf.ly/OatGw

ANDROID Applications

Top Paid ANDROID Applications Pack - 900MB - Torrent - Download - http://adf.ly/OduV5


List of Apps. Included:-

2G,3G,4G Data Traffic Counter v2.1.1.rar
3G Manager v2.0.3.apk
[root] Mobile ODIN Pro v3.65.apk
AccuWeather Platinum v3.0.2.1.apk
Action Launcher Pro v1.5.1.apk
Addons Detector v3.3 (Donate).rar
Android Pro Widgets v1.3.6 Unlocked.apk
AndroVid Pro Video Editor v2.0.4.apk
Andy (Siri for Android) v6.0.apk
Apocalypse Pluto v1.0.apk
App Cache Cleaner Pro 3.0.apk
App Locker Pro v1.0.apk
AppMgr Pro III (App 2 SD) v3.10.apk
Archos Video Player v7.4.5 (Incl. MPEG-2 Video Plugin v1.2).rar
Archos Video Player v7.4.6.apk
ARLiberator for AppRadio v2.03.apk
ASTRO File Manager Browser Pro v4.3.467.apk
AutoGuard Blackbox Pro v3.3.5.apk
Barcode Scanner+ (Plus) v1.9.3.apk
Battery Indicator Pro v8.0.0.apk
Battery Stats Plus Pro v2.0.apk
Battery Widget Reborn v1.7.0 PRO.apk
Battery+ DashClock Extension (Unlocked) v1.7.apk
Cache Clear v3.10.7669.apk
Call block v2.7.8848.apk
Call Recorder FULL v1.3.5.apk
Camera FV-5 v1.43.apk
CameraPro (CameraX) 2.51.apk
CameraPro v2.51.apk
Car Maintenance Reminder Pro v3.2.apk
City Maps 2Go Pro Offline Maps v3.6.15.apk
CM10.1 CM9 Sony XPERIA Z theme v2.0.7.apk
Connection Tracker Pro 1.2.2.apk
CPU RAM DEVICE Identifier v7.1.1.apk
CPU Pro v2.1.apk
Crystal 2 CM10 Theme v1.3.0.apk
DigiCal+ Calendar & Widgets v0.7.2.apk
Document Scanner v2.9.14.apk
DW Contacts & Phone & Dialer v2.4.2.2 PRO.apk
EVA - Virtual Assistant v2.80.apk
EveryCircuit v1.17.apk
External Keyboard Helper Pro v5.6.apk
F1 2013 Timing App - Premium v5.033.apk
Facebook Fastpost v1.0.apk
FACEinHOLE 3.4.0.apk
Feeder - (Google Reader - RSS) v2.0.apk
File Expert Manager Explorer Pro v5.1.4 build 195.apk
File Expert Manager Explorer Pro v5.1.4.apk
File Explorer Plus Root v1.4.0.apk
File Manager (Donate) v1.15.6.apk
File Manager HD (Tablet) (Donate) v1.10.5.apk
Forest HD v1.0.apk
Friendcaster Pro for Facebook v5.3.3.apk
Full Screen Caller ID - BIG! Pro v2.3.4.apk
Full Screen Caller ID PRO v9.5.1.apk
GLASS APEX NOVA GO THEME v4.3.apk
GO Backup Pro (Premium) v3.11.apk
GO Launcher EX v3.32.0 Build 193 Update.apk
GO Locker Pro v1.67.rar
GO Power Master Premium (Save Battery) v3.22.apk
GO SMS Pro Premium v4.75.rar
GO Weather EX Premium v3.71.apk
GreenPower Premium v9.5.4.rar
HD 3D Launcher PRO v1.1.7.apk
HD Widgets v3.9.1.apk
HD Widgets v3.9.apk
Icon Pack - Light Metal v2 v1.0.apk
Infinite Painter v2.4.1.apk
InstaWeather PRO v1.1.2.apk
iOnRoad Augmented Driving Pro v1.5.1p.apk
iReal b v2.1.apk
iSense Music 1.014.apk
JellyBlack AOKP CM Theme v4.2.apk
Knot Video Guide FULL v8.0.apk
Light Flow - LED&Notifications v3.6.3.apk
Lightning Browser Pro v2.0.7.apk
Lithium Music Player v2.207.apk
Locus Map Pro 2.10.1.apk
Locus Map Pro v2.10.2.rar
Lucky Patcher 2.8.7.apk
Lux Auto Brightness v1.11.apk
MapsWithMe Pro, Offline Maps v2.3.1.apk
MAVEN Music Player (3D,Lyrics) v1.0.5.apk
Memory Booster (Full Version) v5.3.apk
Mobile Alarm System v1.2.91.apk
ModFace v1.5.4.apk
Multi Copy Paste! v2.2.apk
Multiscreen Multitasking THD v6.2.apk
Music Player (Remix) v1.2.2.apk
My 3D Fish II v2.0.apk
My Budget Book v3.9.apk
My Log Home iLWP v1.00.apk
MyTrails PRO v1.3.14.apk
Next Launcher 3D MexDroid v1.0.apk
Next Launcher 3D v1.25.apk
Next Launcher Theme Glass v1.4.apk
Next Launcher Theme Windows 8 v1.1.apk
Nexus Media Importer v5.0.1.apk
Notif Pro v0.6.2.apk
Notification Toggle Premium v2.7.1.apk
Notification Toggle Premium v2.7.apk
OfficeSuite Pro 7 (PDF & HD) v7.0.1186.apk
Opera browser beta v14.0.1025.52315.apk
Opera Mobile web browser v14.0 beta1.apk
OruxMaps Donate v5.2.3.apk
Pencil Camera HD v1.20.apk
Perfect Tool for Picasa Premium v6.6.2.apk
Perfectly Clear for Android v1.50 build 15 Patched.apk
Persist + ( Volume Control ) v3.1.9.apk
PGM Galaxy Nexus v1.16d.apk
Photo Studio PRO 0.9.13.apk
Pimp My Music - Pro v2.1.8.apk
PixelPhone Pro v2.7.6.apk
PlayerPro Music Player v2.71 Build 63.apk
Pocket Stables v1.0.5.apk
Podkicker Pro v1.5.4.apk
Poweramp Sketch Skin v1.2.apk
PowerAMP Status Bar Controller v1.0.12.apk
Premium Widgets & Weather v1.3.8.apk

PrintHand Mobile Print Premium v3.1.5.apk
Puzzle Alarm Clock PRO v1.3.2.rar
Radar Speedcamera Alert Pro vAlert Pro 2.35.apk
Radardroid Pro v2.61.apk
RAM Manager Pro v4.6.0.apk
ReLoop Loop Sequencer v2.0.4.apk
Remote Desktop Client v3.7.2.apk
Retro Camera Plus v3.84.apk
ROM Toolbox Pro v5.8.2.apk
Root Toolbox PRO v2.2.6.apk
Runtastic PRO v3.6.4.apk
Samsung Multi Window Manager Pro v1.3.4.apk
Screen Health Pro v1.3.6.apk
Secret Video Recorder Pro v5.7.apk
Security & Antivirus Premier v3.3.0.5546.apk
Sidebar Pro v4.1.0.5.apk
Sketch Guru v1.4.2.apk
Sleep as Android FULL v20130327.apk
Sliding Messaging Pro v4.82.apk
SlingPlayer For Phones v2.2.3.apk
SongPop Premium v1.6.5.apk
Spectrum ICS Pro Live WP v1.2.5.apk
Splashtop Remote Desktop HD 1.9.10.2.apk
SwiftKey Keyboard v4.0.1.128.apk
SwiftKey Tablet Keyboard v4.0.1.128.apk
System Monitor v1.0.162.apk
Titanium Backup Pro 6.0.4 Patched.apk
Touch Control (Nexus 4) v1.6.apk
tTorrent Pro - Simply the best v1.1.2.1.apk
TweetCaster Pro for Twitter v7.2.0.apk
Tweetings for Twitter v2.18.0.apk
TypeSmart 2.0 Keyboard v2.0.31.apk
UCam Ultra Camera Pro v3.0.3.032601.apk
URSafe CPU Monitor PRO v1.8.130315.apk
URSafe File Explorer PRO v2.6.130322.apk
URSafe Media Redirector PRO v2.1.130318.apk
VidTrim Pro - Video Editor v2.2.0.apk
Vignette v2013.03.apk
Visualisator 5000 Pro v2.15.apk
Voice PRO v2.9.4.apk
Weather Pro Local Forecast, Radar v2.1.apk
WhatsEmoji PRO (for WhatsApp) v1.1.apk
White Noise v5.0.3.apk
X-plore File Manager v3.17.apk
ZArchiver v0.6.1.apk
Zooper Widget Pro v2.10.apk

Insatll Notes:-

NOTE: Keygens, patches, Activators, Cracks, Loaders etc are always scanned with Kaspersky Internet Security 2013 Latest Version to Avoid Virus Issues. Different Antiviruses may give different results

Step 1: unpack rar archive
Step 2: install to device
Step 3: Enjoy

Some Unknown facts of Animals


Some Unknown facts of Animals :-

1. முதலைகளால் நாக்கை அசைத்து உணவை சுவைக்கமுடியாது. முதலையின் வயிற்றில் உருவாகும் ஜீரண நீரினால் (digestive juices) சிறிய இரும்பு ஆணியை கூட ஜீரணிக்க முடியும்.

2. நீர்யானைகளின் பிரசவம் நீருக்கடியில் தான் நடக்கும். குட்டி பிறந்ததும் சுவாசிப்பதற்காக அடிக்கடி நீரின் மேலேவந்து செல்லும். குட்டிகளுக்கு பாலூட்டுவதும் நீருக்கடியிலேயே நடைபெறும்.

3. உலகின் மிக வேகமாக ஓடும் நாயினம் Greyhound தான். இவற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர்கள். இந்த நாய்களின் தோற்றம் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்த்தில் உருவானதாக கருதப்படுகின்றது.

4. இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள tapetum lucidum என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்குவதால்தான்

5. Grizzly Bear, இந்த கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.

6. பூனைகளால் தாடையினை (jaw) வல இட புறமாக அசைக்க முடியாது.

7. விலங்குகளிலே ஒட்டகசிவிங்கி மட்டுமே பிறக்கும் போதே தலையில் கொம்புடன் பிறக்கும்

8. உலகில் வாழும் மிகப்பெரிய பறவை ஆண் தீ கோழிகள்தான். இதன் எடை சுமார் 175 கிலோ இருக்கும்.

9. Japanese cranes, இந்த கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும். (விமானம் போன்று)

10. Great horned owl, இந்த ஆந்தையின் உடலில் உள்ள இறகுகளை எடுத்துவிட்டு அதன் எடையை கணக்கிட்டால் அதன் இறகுகளை விட எடை குறைவாகத்தான் இருக்கும்

11. விலங்கினகளில் Cat fish க்குதான் அதிக சுவை மொட்டுகள் அதாவது 27, 000 சுவை மொட்டுகள் உண்டு.

12. தெள்ளு பூச்சி (Flea) அதன் உடலின் நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும்.

13. நட்சத்திர மீனுக்கு மூளை கிடையாது.

14. தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

15. Bald Eagle, இந்த பருந்துகளின் கூடுகள் தான் உலகிலே மிகப்பெரிய பறவை கூடுகளாகும். இவை சுமார் 2 மீட்டர் நீளமும் மீட்டர் 3 ஆழமும் இருக்கும்.

Billa 2 (2012)


Billa 2 (2012) - Tamil - BRRip - 720p - x264 - AC3 - ESub - 1GB - Torrent - Download - http://adf.ly/OaXMD
Photo: Billa 2 (2012) - Tamil - BRRip - 720p - x264 - AC3 - ESub - 1GB - Torrent - Download - http://adf.ly/OaXMDPhoto: Billa 2 (2012) - Tamil - BRRip - 720p - x264 - AC3 - ESub - 1GB - Torrent - Download - http://adf.ly/OaXMD

Kumudham (May 8th 2013)


Kumudham (May 8th 2013) - Tamil Weekly Magazine - 19MB - Direct - Download - 

Photo: Kumudham (May 8th 2013) - Tamil Weekly Magazine - 19MB - Direct - Download - http://adf.ly/Of8PG




                                                      http://adf.ly/Of8PG

15 நிமிடத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட உத்தரவு

நாளை, நான்கு இணைய தளங்களில் மட்டுமே, தேர்வு முடிவு வெளியாவதால், சிக்கல் இல்லாமல், தேர்வு முடிவை அறிய முடியுமா என, கேள்வி எழுந்துள்ளது.

நாளை என்ன நடக்குமோ என, தேர்வுத்துறை, "திக்... திக்...' நிலையில் உள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட்ட, 15 நிமிடங்களில், பள்ளி தகவல் பலகையில், தேர்வு முடிவுகளை காட்சிப்படுத்த வேண்டும். இதை, செயல்படுத்த தவறும் தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்" என , பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 9 காலை 10:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதை வெளியிடுவதில், புது நடைமுறைகளை, பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. முடிவு வெளியிட்ட 15 நிமிடங்களில், பள்ளிகளில் உள்ள தகவல் பலகையில், தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் பட்டியலை, காட்சிப்படுத்த வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை மீறும் தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. பல ஆண்டுகளாக, 40க்கும் அதிகமான இணையதளங்களில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்ததால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொண்டனர். ஆனால், நாளை, நான்கு இணைய தளங்களில் மட்டுமே, தேர்வு முடிவு வெளியாவதால், சிக்கல் இல்லாமல், தேர்வு முடிவை அறிய முடியுமா என, கேள்வி எழுந்துள்ளது.

தேர்வு முடிவுகளை, சம்பந்தபட்ட மாணவ, மாணவியர் மட்டுமே பார்ப்பது இல்லை. பெற்றோர்கள், மாணவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் என, பல பேர், தேர்வு முடிவை பார்த்து சொல்கின்றனர். அதன்படி, பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர் எனில், ஒரு மாணவரின் முடிவை, குறைந்த பட்சம், ஐந்து பேராவது பார்ப்பர் என, கல்வித்துறை முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

பிளஸ் 2 தேர்வு முடிவை, 40 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், பார்ப்பர். 40க்கும் அதிகமான இணையதளங்களில், தேர்வு முடிவை வெளியிடும்போது, மாணவர், பெற்றோர் அனைவரும், வெவ்வேறு இணையதளங்களில், தேர்வு முடிவை பார்ப்பதால், இணைய தளத்தில் எந்த சிக்கலும் எழுவதில்லை.

அதேநேரத்தில், பல லட்சக்கணக்கானோர், நான்கு இணைய தளங்களில் மட்டும் தேர்வு முடிவை பார்க்க நேர்ந்தால், "சர்வர்' தாங்காது. இணைய தளம் முடங்கும் ஆபத்தும் உள்ளது. தேர்வு முடிவை, எளிதில் தெரிந்து கொள்ளும் உரிமை, மாணவர்களுக்கு இருக்கிறது. தொழில் நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இந்த காலத்தில், இத்தனை இணையதளங்களில் மட்டுமே வெளியிடுவோம் என, கூறுவது சரியல்ல.

இந்த விவகாரத்தில், தனியார் நிறுவனங்கள், வர்த்தக ரீதியாக செயல்படுகின்றன என்பதை பார்க்கக் கூடாது. மாணவர்கள், எவ்வித பிரச்னையும் இன்றி, உடனுக்குடன், தேர்வு முடிவை தெரிந்து கொள்கிறார்களா என்பதைத் தான் பார்க்க வேண்டும். படிப்பிற்காக, பல ஆயிரம் ரூபாயை செலவழிக்கும் பெற்றோர்களுக்கு, 10 ரூபாயோ, 20 ரூபாயோ செலவழித்து, இணையதளங்களில் முடிவை அறிவது, பிரச்னையாக இருக்காது.

அரசு தெரிவித்துள்ள இணைய தளங்களில், பிரச்னை ஏற்பட்டால், மாணவர்கள் கடுமையாக பாதிப்பர். பெரும் குழப்பமும் ஏற்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். இந்த நடைமுறை சிக்கலை, தேர்வுத்துறையும் உணர்ந்துள்ளது. ஆனால், மேலிட அளவில் எடுத்த முடிவு என்பதால், நாளை என்ன நடக்குமோ என, தேர்வுத்துறை, "திக்... திக்...' நிலையில் உள்ளது.

தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள் விவரம்;

http://tnresults.nic.in/

http://dge1.tn.nic.in/

http://dge2.tn.nic.in/

http://dge3.tn.nic.in/



மதிப்பெண் பட்டியல் எப்போது கிடைக்கும்?

பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் சேர, 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, மதிப்பெண் பட்டியலையும், விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும். ஆனால், 15 தேதிக்குப் பிறகே, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என, தெரிகிறது. இதனால், கடைசி நாட்களில், அவசரம், அவசரமாக விண்ணப்பிக்க வேண்டிய நிலைக்கு, மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.