Saturday 19 April 2014

This guy takes the one-man-band game to bizarre and amazing new heights.


வங்கிகள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்!?

பொது துறை வங்கி அதிகாரிகள் நிதியமைச்சகத்திடம் வங்கிகளுக்கு 5 வேலைநாட்கள் மட்டும் போதுமானது, இதனால் வங்கிகளுக்கு வாரம் 5 வேலை நாட்களாக குறைக்க சில முக்கிய பரிந்துறைகளுடன் மனுவை அளித்துள்ளது. வங்கியின் வார வேலை நாட்களை 5ஆக குறைப்பதால் பல வகையில் வங்கித் செலவுகளை குறைக்கலாம் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து நிதியமைச்சகம் விரைவில் முடிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

A cashier counts currency notes as customers wait inside a bank in Hyderabad

இதனிடையே வாரத்தில் சனிக் கிழமை வங்கிகளுக்கு விடுமுறை விடுத்தால் வங்கி செயல்பாடு முற்றிலும் பாதிக்கப்படும், மக்களுக்கும் பெறும் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்காவதாக இருக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்தது.அதற்கு வங்கிகளின் அதிரடியான பதிலாக,”
இப்போதெல்லாம் அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளும் 24×7 மணிநேரமும் செயல்படும் இணையச் சேவை மற்றும் மொபைல் வங்கிச் சேவை அளித்து வருகிறது,இதுமட்டும் அல்லாமல் ஒவ்வொரு தெரு மூலைக்கும் ஒரு ஏடிஎம் உள்ளது. இதனால் வங்கி சேவை பெரிதும் பாதிக்கப்படாது” என வங்கித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்தியாவின் சிறந்த பொதுத் துறை வங்கிகள் என போற்றப்படும் வங்கிகளும் இத்திட்டத்தை ஆதரிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் வங்கி செயல்பாட்டில் அதிகப்படியான பணத்தை சேமிக்கப்படும் என நிதியமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள்
பெரும்பாலான மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள். ஏன் இந்த சலுகையை வங்கி அதிகாரிகள் அனுபவிக்க கூடாது என வர்த்தக பிரிவு அதிகாரிகள் கேள்வி ஏழுப்பியுள்ளனர்.1985ஆம் ஆண்டு மத்திய அரசு, நிர்வாகத்தில் திறனை அதிகரிக்க வாரத்தில் 5 வேலைநாள் திட்டத்தை அறிமுகபடுத்தியது குறிப்பிடத்தக்க்து.

கூகுள் கண்ணாடிகள் விற்பனைக்கு வந்தாச்சி!

இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தரும் கூகுள் கிளாஸ்.இதில் நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவியான இந்த கூகுள் கண்ணாடிகள் இன்று முதல் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. google_glass_privacy_
ஆரம்பத்தில் மிக பிரமாண்டமாக இருந்த கம்ப்யூட்டர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து கையடக்க செல்போன் அளவுக்கு மாறிவிட்டன.இப்போது கூகுள் நிறுவனம் வடிவமைத்துள்ள கண்ணாடி, உலகத்தை நம் கண்ணுக்கு அருகிலேயே கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. இதுவரை சோதனை முயற்சியாக செய்யப்பட்டு வந்த கூகுள் கண்ணாடிகளை இன்று முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டுவர கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.தற்போது 1500 டாலர் விலையில் கிடைக்கும் இந்த கண்ணாடிகளை அமெரிக்கவாசிகள் அணிந்து கொண்டு நாட்டின் எந்த பகுதியில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இன்டர்நெட்டில் வலம் வரலாம்.

கூகுள் கண்ணாடியில் உள்ள மைக்குக்கு அருகே, ‘ஒகே. கிளாஸ்’ என்று சொன்னதும் உடனடியாக கிளாஸ் செயல்படத் தொடங்கிவிடும். இதில் பாட்டு கேட்பது, திசை அறிவது, வானிலை முன்னறிவிப்பு, செய்தி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை படிக்கலாம், திரும்ப குரல் வழியாகவே அவற்றுக்கு பதில் அனுப்பலாம். இந்த கிளாஸின் வலது பகுதியில் உள்ள சிறிய லென்ஸ் வழியே ஒளிப்படக் கருவியும் வீடியோ எடுக்கும் வசதியும் உள்ளன. ‘டேக் எ பிக்சர்’ என்று சொன்னால், கிளாஸ் படம் எடுத்துவிடும். மேலும், நீங்கள் பார்க்கும் காட்சியை, உங்கள் நண்பர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பவும் முடியும்.
இந்த கண்ணாடியில் குரல் மூலமாகவே கூகிளில் வழக்கமான தேடலைச் செய்ய முடியும் ஆனால் வலைத்தளங்களை பார்க்க முடியாது. அதற்காக ஒரு ஆண்ட்ராய்ட் கைப்பேசி வைத்துக் கொண்டு இந்தக் கண்ணாடியின் பலனை முழுமையாக அனுபவிக்கலாம். சாலையில் செல்லும்போது இந்தக் கண்ணாடி வழிகாட்டும். டிரைவிங், சைக்கிள் ஓட்டுதல், நடக்கும்போதெல்லாம் இதை பயன் படுத்தலாமாம். குரல் அடையாளம் காணும் வசதி இருப்பதால், வழியறிய டிரைவிங்கை நிறுத்த வேண்டியதில்லை. ஆனால் இதன் காரணமாக டிரைவிங்கின்போது கவனச் சிதறல் ஏற்படலாம். அதனால் விபத்து நிகழ்வது போன்ற பாதுகாப்புப் பிரச்சினைகளை ஏற்படும் என்றும் கூறுகின்றனர் என்றாலும் .இனி கம்ப்யூட்டர்களுக்கும், லேப்டாப்களுக்கும், டேப்லெட்டுகளுக்கும் காயலான் கடைக்கு போடப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது

Thursday 10 April 2014

பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு அவர்களது ஆடையே காரணம்! – சர்வே தகவல்!


பிரேசில் நாட்டில் நடந்த கருத்து கணிப்பு ஒன்றில் பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு அவர்களது உடல் தெரியமளவிற்கு அணியப்படும் ஆடையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பொருளாதார ஆராய்ச்சிக்கான அரசு அமைப்பு சர்வே ஒன்று நடத்தியது. கடந்த 2013ம் ஆண்டு மே மற்றும் ஜூனிற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் 3,810 பேர் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலும் பெண்கள். உடல் தெரியும் வகையில் ஆடை அணிவது கற்பழிப்பிற்கு வழிவகுக்கிறது என்று 65 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்கள் தெரிந்திருந்தால் கற்பழிப்பு சம்பவங்கள் குறையும் என்று 58.5 சதவீதத்தினர் கூறியுள்ளனர். இந்த சர்வே முடிவு அந்நாட்டில் சர்ச்சையை எழுப்பியுள்ளது. பெரும்பாலான பெண்கள் தங்களது புகைப்படங்களை எடுத்து அதனை ஆன்லைனில் அனுப்பியுள்ளனர்.
lady - brazil
சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அனுப்பியுள்ள புகைப்படங்களில் குறைந்த ஆடை அல்லது ஆடைகளின்றி, நான் கற்பழிக்கப் படுவதற்கு தகுதியானவளல்ல என்ற வாசகங்களை தாங்கியபடி நிற்கின்றனர். பேஸ்புக் வழியே கற்பழிப்புக்கு எதிரான ஆன்லைன் எதிர்ப்பு போராட்டத்தை பத்திரிக்கையாளரான நானா குயிரோஸ் நடத்தியுள்ளார்.இதற்கு பல வழிகளில் இருந்தும் அவருக்கு கற்பழிப்பு மிரட்டல்கள் வந்துள்ளன. இது குறித்து அவர் கூறுகையில், ஆச்சரியப்பட தக்க விசயம் என்னவெனில், விழாக்களில் ஆடைகளின்றி நடப்பது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த பிரசார போராட்டத்திற்கு ஆண்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகத்தில் கற்பழிப்புக்கு எதிரான வாசகங்களான கற்பழிப்பிற்கு எந்த பெண்ணும் தகுதியானவர் அல்ல என்பதை தெரிவிக்கும் வாசகங்களுடன் தங்களது புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.இந்த கருத்து கணிப்பு குறித்து பிரேசில் நாட்டு அதிபர் தில்மா ரூசெப் கூறும்போது, வீட்டிற்கு வெளியே மற்றும் உள்ளே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொள்ள அரசாங்கம் மற்றும் சமூகம் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதை ஆய்வு முடிவு தெரிவிப்பதாக கூறியுள்ளார். பிரேசில் சமுதாயம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மோடியும் 300 எம்.பி.-களும் By கதிர்

முன்னூறு எம்.பி.க்கள் என் பின்னால் அணிவகுக்க வேண்டும்’ என்று நரேந்திர மோடி பேசியிருக்கிறார். பிஜேபி கூட்டணியில் உள்ள கட்சிகள் அதைக் கேட்டு ஆடிப் போயிருக்கின்றன. பிஜேபியில் உள்ள தலைவர்களோ அசந்து போயிருக்கிறார்கள்.எதற்கு குறி வைக்கிறார் மோடி?
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தவர்கள் அரசியலில் உண்டு. ஒரே கல்லில் ஒரு மரத்தையே வீழ்த்தியவர்களும் இருந்திருக்கிறார்கள். ஒற்றைக் கல்லை வீசியெறிந்து ஒரு தோட்டத்தையே கைவசப் படுத்த விரும்பும் அரசியல்வாதியை இந்த நாடு இப்போதுதான் சந்திக்கிறது.


‘நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 273 எம்.பி.க்கள் போதும். அது பெரிய விஷயமல்ல. 300 பேராவது என் பின்னால் அணிவகுக்க வேண்டும். அப்போது என் பேச்சை இந்த உலகமே கேட்கும்!’ என்கிறார் மோடி.
இந்த வார்த்தைகளை வேறு எந்த தலைவர் பேசியிருந்தாலும் அவரது கட்சிக்காரர்கள் ஆரவாரமாக கைதட்டி இருப்பார்கள். எதிர்க்கட்சிகள் கேலி செய்திருக்கும். ஆனால், மோடி விஷயத்தில் பாருங்கள், இரு தரப்பிலும் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. ஏனென்றால் அவர்கள் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.
மோடி விளையாட்டுப் பிள்ளை அல்ல. விவரம் தெரியாத அரசியல்வாதியும் அல்ல. இந்திய நாடாளுமன்றத்தில் தனியொரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைப்பது முடிந்துபோன கதை என்பது அவருக்கும் தெரியும். ஆனாலும் உள்ளத்தில் இருப்பதை கொட்டிவிட்டார்.
பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நேரத்தில் கலவரம் வெடித்து நாடெங்கும் பதட்டம் நிலவியது. உணர்ச்சிக் கொந்தளிப்பான அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்ததுதான் கடைசி மெஜாரிடி. 414 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இந்தியாவை ஒட்டு மொத்தமாக ராஜிவ் காந்தி மாற்றியமைப்பார் என நாடு எதிர்பார்த்தது. அசுரப் பெரும்பான்மை என்று வர்ணிக்கப்பட்ட பெரும் பலம் இருந்ததால் அவர் எது நினைத்தாலும் செய்திருக்கலாம். ஆனால், அரசியல் அனுபவம் இல்லாததால் தான் நினைத்தவாறு அரசு நிர்வாகத்தை தூய்மைப்படுத்த அவரால் இயலாமல் போனது வேறு விஷயம். அதன் பின்னர் இன்றுவரை எந்த தேர்தலிலும் ஒரு தனிக்கட்சி பெரும்பான்மை பெறவே இல்லை. ராஜிவ் கொலை செய்யப்பட்ட பின்னணியில் நடந்த தேர்தலில்கூட அக்கட்சி பெற முடிந்த இடங்கள் மெஜாரிடிக்கு 30 சீட் குறைவுதான்.
கூட்டணி யுகம் உதயமாயிற்று. அது வளர்ந்து வலுவடைந்து, பிராந்தியக் கட்சிகளின் தயவு இல்லாமல் மத்தியில் எந்த தேசியக் கட்சியும் ஆட்சி நடத்த முடியாது என்பது இன்று நடைமுறையாகி விட்டது. இந்த நிலையில் மோடி 300+ என்ற அசாத்தியமான நம்பரை குறி வைப்பது ஏன்?
முதல் காரணம், கூட்டணிக் கட்சிகளின் இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்க வேண்டிய நிலையை அவர் தவிர்க்க விரும்புகிறார். எந்த இலாகாவை விட்டுக் கொடுப்பது என்பதில் தொடங்கி, கிடைத்த இலாகாவை பயன்படுத்தி முடிந்தவரையில் பொதுச் சொத்துகளை கபளீகரம் செய்வதுவரை கூட்டணிக் கட்சிகள் என்ன செய்தாலும் தடுக்க முடியாமல் வெட்கமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலைமை தனக்கு நேரக்கூடாது என்பதில் மோடி உறுதியாக இருக்கிறார். சுற்றிலும் திருடர்களை வைத்துக் கொண்டு ’நான் நேர்மையாகத்தானே செயல்படுகிறேன்’ என்று நெஞ்சைத் தொட்டுப் பார்த்து திருப்தி அடைய அவரொன்றும் மெத்தப் படித்த மேதை மன்மோகன் அல்லவே.
இரண்டாவது காரணம், பிரதமர் நாற்காலியில் அமர்ந்த பிறகு கட்சியின் மூத்த தலைவர்களோ அல்லது ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளோ ஆலோசனை என்ற பெயரில் குறுக்கீடு செய்வதையும் மோடியால் ஜீரணிக்க முடியாது. சீனியர்கள் என்ற ஒரே தகுதியில் கட்சியில் சிலர் ஆதிக்கம் செலுத்துவதாக அவர் அடிக்கடி குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த தேர்தலோடு அத்வானி, ஜோஷி உள்ளிட்ட முதிய தலைவர்களுக்கு விடை கொடுக்க அவர் முடிவு செய்துவிட்டார். அதில் அவரிடம் தயக்கமோ ஒளிவு மறைவோ கிடையாது. வெற்றி பெற்று பழக்கப்பட்ட தொகுதிகளுக்கு மாறாக தோல்வி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளை சீனியர்களுக்கு ஒதுக்கீடு செய்வதில் மோடி காட்டிய வைராக்கியம் கட்சிப் பிரமுகர்களால் பிரமிப்புடன் அலசப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவும் வழிகாட்டுதலும் இல்லாமல் பிஜேபி இயங்குவது கடினம் என்று பலர் நம்புகிறார்கள். அது உண்மைதான். இந்த தேர்தலில் வென்று அக்கட்சி ஆட்சி அமைக்கும்போது, வெங்கய்ய நாயுடு, அருண் ஜேட்லி, அனந்த் குமார், நிதின் கட்கரி, சிவராஜ் சவுகான் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் மோடியின் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள். அப்போது கட்சியை நடத்திச் செல்ல தலைவர்களுக்கு தட்டுப்பாடு வரும். அதை சமாளிக்க ஆர்.எஸ்.எஸ் இப்போதே இரண்டாயிரம் பேரை தயார் செய்துவிட்டது. அந்த அமைப்பில் பிரசாரக் என்று குறிப்பிடப்படும் இவர்கள், கட்சி நிர்வாகம் குறித்த பாடங்கள், பயிற்சிகளை முடித்துவிட்டு கட்டளைக்காக காத்திருக்கிறார்கள். இல. கணேசன், கோவிந்தாச்சார்யா, சேஷாத்ரி சாரி போன்றவர்கள் அவ்வாறுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து பிஜேபிக்கு அனுப்பப்பட்டவர்கள். அவ்வளவு ஏன், ஆர்.எஸ்.எஸ் பிரசாரக்காக இருந்த நரேந்திர மோடியே டெபுடேஷனில் பிஜேபிக்கு வந்தவர்தான்.
அதனால் அவருக்கு தாய்க்கழகத்தின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் அத்துபடி. வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள் செய்த தவறை தானும் செய்ய மோடி தயாரில்லை. பிரதமராகவும் துணைப் பிரதமராகவும் உயர்ந்த பின்னர், ஆர்.எஸ்.எஸ் வளையத்தில் இருந்து விடுபட்ட சுதந்திர தலைவர்களாக காட்டிக் கொள்ள அவர்கள் இருவரும் முயற்சி செய்தனர். பாரதத்தின் வரலாற்று நாயகனாக வாஜ்பாய், அவரது வெல்ல முடியாத தளபதியாக அத்வானி ஆகியோரை சித்திரப் படுத்தியதை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா, என்ன? புறக் கண்களுக்கு புலப்படாத விஸ்தாரமான கட்டமைப்பு கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் புறக்கணிப்பால் அந்த தலைவர்களின் முயற்சிகள் எடுபடவில்லை. அதை அருகிலிருந்து பார்த்தவர் மோடி. எனவே, புத்திசாலித்தனமாக வேறு வழியை தேர்ந்தெடுத்தார். ஆர்.எஸ்.எஸ் தலைமையுடன் இணக்கமாக நடந்துகொண்டே, மெல்ல மெல்ல தன் பாணிக்கு அதை திருப்புவது அவர் திட்டம்.
ஒரு நிகழ்ச்சி உங்களுக்கு நினைவிருக்கலாம்.
ஆர்.எஸ்.எஸ் ஆணைப்படி பிஜேபி தலைவராக்கப்பட்ட நிதின் கட்கரியிடம் மோடி பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ’பிரதமர் ஆகக்கூடிய தகுதி படைத்தவர்கள் என் கட்சியில் ஆறேழு பேர் இருக்கிறார்கள்; மோடி எட்டாமவர்’ என்று பதில் அளித்திருந்தார். அத்வானி, அருண் ஜேட்லி, சுஷ்மா போன்றவர்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் முகத்தில் கடுப்பு காட்டியோ, ட்விட்டரில் பதிவிட்டோ, வெளிநடப்பு செய்தோ தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பார்கள். மோடி அவ்வாறு தன் உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அவருக்கு நன்றாகவே தெரியும், டெல்லி சிம்மாசனம் மீது கண் வைக்கும் தனக்கு செக் வைக்க ஆர்.எஸ்.எஸ் ஏற்பாட்டில் தலைவரானவர்தான் கட்கரி என்பது. ஆகவே செய்தியாளர்கள் துருவித் துருவி கேட்டும்கூட, ‘எட்டாவது குழந்தை என்ன செய்தது என்பது புராணங்களை படித்தவர்களுக்கு புரியும்’ என்று பூடகமாக குறிப்பிட்டார். அசுரன் கம்சனை வதம் செய்த பகவான் கிருஷ்ணன் எட்டாவது குழந்தை என்பது தெரியும்தானே. விரைவிலேயே கட்கரி பதவியை பறிகொடுத்தார். அந்த இடத்துக்கு வந்து அமர்ந்தவர் ராஜ்நாத் சிங். யாரும் எதிர்பாராத வகையில், ‘மோடியை விட்டால் இந்தியாவுக்கு நாதியில்லை’ என்று முதல் முழக்கம் செய்தார். குஜராத் முதல்வரின் காய் நகர்த்தும் சாமர்த்தியத்துக்கு இது இன்னுமொரு எடுத்துக்காட்டு. கட்கரி பினாமி பெயர்களில் நிறைய கம்பெனிகள் நடத்தி வந்த விவகாரம் குஜராத்தில் இருந்துதான் வெளிச்சத்துக்கு வந்தது என்பதை சொல்லிக் காட்ட தேவையில்லை.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பொருத்தவரை சில அசைக்க முடியாத நியதிகள் உண்டு. தனி மனிதனைவிட கட்சி பெரிது. கட்சியைவிட லட்சியம் பெரிது. தனிநபர் துதி தவறானது. கூட்டுத் தலைமை சிறப்பானது. இப்படியாக. ஆனால், மோடி இதற்கு நேர்மாறான தடத்தில் பயணம் செய்பவர். இந்தியர்களுக்கு ஹீரோ ஒர்ஷிப் முக்கியம் என்பதை அவர் உணர்ந்திருப்பதுபோல் காங்கிரஸ்காரர்கள்கூட அறிந்திருக்க மாட்டார்கள். ஹீரோ எப்படி இருக்க வேண்டும்? பலசாலியாக, எதற்கும் அஞ்சாதவனாக, எதிரிகளை இல்லாமல் ஆக்குபவனாக இருக்க வேண்டும்; எந்தக் கேள்வியும் இல்லாமல் எல்லோரும் அவனது துதி பாட வேண்டும். அதைத்தான் சாதித்திருக்கிறார் மோடி. பத்தாண்டுகளுக்கு மேலாக சந்தடியில்லாமல் குஜராத்தில் இளைஞர்கள் பட்டாளம் ஒன்றை உருவாக்கி, ஆர்.எஸ்.எஸ் மூலமாகவே அதற்கு பயிற்சியும் அளித்து, தேசபக்தி என்ற தலைப்பில் அதற்கு அரசியல் உத்திகளை கற்றுக் கொடுத்து, அந்த மாநிலத்தை தனக்கான ஏவுதளமாக நிர்மாணித்திருக்கிறார் அவர்.
அமெரிக்காவில் பரவிக் கிடக்கும் பணக்கார குஜராத்திகளும், இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும் தொழிலதிபர்களும் எதிர்காலக் கனவுகளுடன் அந்த தளத்திலிருந்து மோடியை டெல்லி தர்பாரில் கொண்டு சேர்க்கும் அரசியல் ராக்கெட்டுக்கு எரிபொருள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
’இந்தியாவை பலமான நாடாக மாற்றி, இந்துக்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்கிற உங்கள் லட்சியத்தை நிறைவேற்ற இதைவிட அருமையான சந்தர்ப்பம் வாய்க்காது; அதை நிறைவேற்றித்தர என்னைவிட பொருத்தமான ஆளை நீங்கள் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது’ என்று ஆர்.எஸ்.எஸ் தலைமையை நம்பவைத்தது மோடியின் விடாமுயற்சிக்கு கிட்டிய பெரும் வெற்றி.
வலிமை என்பது ஆர்.எஸ்.எஸ் அபரிமிதமாக நேசிக்கும் இரண்டாவது வார்த்தை. பாகிஸ்தானை உடைத்து வங்கதேசத்தை உருவாக்கிய இந்திரா காந்தியை மனமார பாராட்டியது. இந்தியாவை ஆளவும், இந்து தர்மங்களை காப்பாற்றவும் வலிமையான தலைவரால்தான் முடியும் என அது நம்புகிறது. எத்தனை தடுத்தும் எழுந்து நிற்கும் மோடியை அது இப்போது அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ளது. இரு தரப்பும் அவரவர் லட்சியங்களை பரஸ்பரம் பூர்த்தி செய்ய எழுதப்படாத உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் நடக்கும் சில நிகழ்வுகளை பார்க்கும்போது வெளிப்படையான தொடர்புகள் தெரியவில்லை என்றாலும், ஓட்டுப்பதிவு நேரத்தில் கிளைமாக்சாக என்ன நடக்குமோ என்ற சிந்தனையை அவை கிளறி விடுகின்றன.
’இந்திய மண் மீது ஆசைப்படுவதை நிறுத்திக் கொள்’ என்று சீனாவுக்கு மோடி எச்சரிக்கை விடுக்கிறார். ’சீனாவிடம் அடைந்த தோல்விக்கு நேருதான் காரணம்’ என்று ஹெண்டர்சன் ப்ரூக்ஸ் அறிக்கையை ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பத்திரிகையாளர் அம்பலப்படுத்துகிறார். ’கிரீமியாவை ரஷ்யா பிடித்ததுபோல அருணாசல் பிரதேசத்தை சீனப்படைகள் வசப்படுத்தும்’ என்று ஒரு தகவல் பரப்பப்படுகிறது. ’விபரீதமாக எதையாவது செய்து தொலைக்காதே’ என்று சீனாவை எச்சரிக்கிறது அமெரிக்கா.
’பாபர் மசூதி இடிக்கப்பட்டது உணர்ச்சிவசப்பட்ட இந்து தொண்டர்களால் அல்ல; அது அத்வானி, கல்யாண் சிங் ஆகியோர் ஒரு மாதம் திட்டமிட்டு நடத்திய தாக்குதல். அன்றைய பிரதமர் நரசிம்ம ராவுக்கும் தெரியும்’ என்று கோப்ராபோஸ்ட் ஒரு ரகசிய தொகுப்பை ஒளிபரப்புகிறது. ‘நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல’ என்று விளக்கம் தர வேண்டிய கட்டாயத்துக்கு மூத்த பிஜேபி தலைவர்களும் காங்கிரசும் தள்ளப்படுகின்றனர்.
’காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து. அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டம். இந்தியாவில் பிறந்த எவரும் சிறுபான்மையினர் என்று கூறிக்கொள்ள முடியாது. மதத்தின் பேரால் அரசு சலுகைகள் வழங்கக்கூடாது. உணவுக்காக பசுவை கொல்லக்கூடாது. இந்தியா என்ற பெயரை பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என திருத்த வேண்டும்… என்று சர்ச்சைக்குரிய பல கோஷங்களை பிஜேபியும் அதன் சார்பு அமைப்புகளும் எழுப்பி வருகின்றன. இவை குறித்து மோடி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று நான்கைந்து தேசிய சிறுபான்மை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதுவரை மோடி பதிலளிக்கவில்லை. அவரது முன்னூறு எம்.பி.க்கள் பேச்சு குறித்து மற்ற கட்சிகள் அதிர்ச்சி அடைய காரணம் இதுதான்: ‘இந்தியாவின் அடித்தளத்தையே மாற்றியமைக்க மோடி திட்டமிடுகிறாரோ?’
அங்கொரு மாற்றம், இங்கொரு மாற்றம் என்பது மோடிக்கு பிடிக்காது. அடியோடு மாற்ற வேண்டும் என்பது அவரது இலக்கு. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால்தான் அரசியல் சாசனத்தில் கைவைக்க முடியும். அவர் ஆசைப்படுவது போல பிஜேபிக்கு 300 தொகுதிகள் கிடைத்துவிட்டால், அடிப்படைகளை மாற்றுவதற்கு தோழமைக் கட்சிகளை சம்மதிக்க வைக்கலாம் என்று நம்புகிறார்.
அப்படி நடந்தால் உலகம் திரும்பிப் பார்க்காமல் என்ன செய்யும்?

Monday 7 April 2014

இந்தியன் ரயில்வே – ஐ ஆர் சி டி சி – சீக்ரெட்ஸ்

இந்தியன் ரயில்வேயில் முக்கிய பிரச்சினை அதன் டிராஃபிக் என சொல்லப்படும் அதிக பேர் புக்கிங் செய்ய முனைப்படும்போது அதனின் பல பிரச்சினைகள் நம்மளே சரி செய்தால் பிரச்சினை இல்லாமல் புக்கிங் செய்யலாம் அதன் சில ரகசியங்கள் டெவலப்பர் சங்கத்தில் இருந்து சுட்டது உங்களுக்காக – இது 100% லீகல் அதனால் கவலை கொள்ள வேண்டாம். March 2014 IRCTC invested 10 crore with 64 GB RAM servers with a spike capacity of 1 Million to 8 Million in REAL TIME and LIGHT VERSION Launched
முதன் முதல் உங்க்ள் பிரவுசரின் அத்தனை கேஷ் / குக்கிஸை கிளியர் செய்யவும். AVOID Internet Ecplorer
ravi - apr 5
இரண்டாவது உங்கள் பிரவுசர் இந்திய நேரம் அதுவும் ஐ ஆர் சி டி சி சர்வர் நேரத்துடன் ஒத்து போக வேண்டும். இதன் மூலம் புக்கிங் அனேகமாய் ஒகே – ஏன் என்றால் வெளி நாட்டிலிருந்து புக்கிங் செய்யும் போது ரிலே டோக்கன் எனப்படும் சர்வர் டிலே – மற்றூம் ஆக்டிவ் ரவுட்டிங் வழி என நினைத்து உங்களுக்கு காலம் தாழ்த்தும். ஐ ஆர் சி டி சி சர்வர் டைமை மேட்ச் செய்ய இந்த லின்க்கை அழுத்தவும். http://www.indianrail.gov.in/train_Schedule.html ஏதாவது ஒரு ரயில் நம்பரை போடவும் உடனே அந்த ரயில் டீட்டெயில் மற்றூம் கீழே இன்றைய தேதி மற்றூம் ஐ ஆர் சி டி சி ரயில்வே சர்வரின் நேரம் – மிக துள்ளிய்மாக காட்டும் அதற்க்கு ஏற்றார் போல் செட் செய்துக்கோங்க – மூணு நிமிஷம் அப் / ட்வுன் ஒகே –
மூன்றாவது நீங்கள் ஃபயர் ஃபாக்ஸ் பிரவுசர் யூஸ் ப்ண்ணீனா இந்த டூலை டவுன்லோட் செய்தா அதுவே டைம் சின்க் செய்யும் – http://userscripts.org/scripts/show/109376 – இது குரோம் பிரவுசருக்கு வேலை செய்யும்.
நாலாவது செஷன் எக்ஸ்பயரி தான் பிரச்சினை எல்லாம் முடிஞ்சு கடைசியா எக்ஸ்பயரி ஆகி லாகின் திரும்பவும் செய்ய சொல்லும் இது தான் உச்சகட்ட கொடுமை – இதற்க்கு இரண்டு வழிகள் – ஒன்று – உங்க செஷன் ஐடியை பிரவுசரில் இருந்து எடுத்து கொள்ளுங்கள் – இந்த லின்க்கை உபயோகபடுத்தி https://www.irctc.co.in/cgi-bin/bv60.dll/irctc/booking/planner.do?screen=fromlogin&BV_SessionID=%40%40%40%400958659016.1349272417%40%40%40%40&BV_EngineID=ccfladfhmfdefklcefecehidfgmdfkm.0 – இன்னொரு பிரவுசர் – அதாவது நீங்கள் ஃபயர் ஃபாக்ஸ் யூஸ் பண்ணினா = குரோமில் இதை போட்டு செஷன் ஐடியை மாற்றீ அப்படியே சர்வுருக்குள் குடியிருந்த கோயில் மாதிரி ஒட்டிக்கலாம். மூணு நிமிஷத்துக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு ஆக்டிவிட்டி பண்ணி கொண்டே இருங்கள் லாக் அவுட் ஆகவே ஆகாது. இரண்டாவது மேஜிக் ஆட்டோஃபில் எனப்படும் நிலைத்தகவலை அப்படியே சர்வருக்குள் போட இந்த டூலை பயன்படுத்தினால் எல்லா டீட்டெயிலும் போட தேவையில்லை அதற்க்கான லின்க் – http://ctrlq.org/irctc/ – ஃபயர் ஃபாக்ஸ் / குரோமுக்கு ஆல் ஒகெ ஒகெ – இதன் மூலம் 80% கண்டிப்பாய் டிக்கட் கிடைக்க வாய்ப்புண்டு.
ஐந்தாவது கடைசியாக – தட்கல் டிக்கட் நேரமான 10 – 12 மணி நேராத்தில் இன்னொரு புது சர்வரை ஐ ஆர் சி டி சி மார்ச் மாதம் 10 கோடிக்கு வாங்கி இன்ஸ்டால் செய்திருக்கிறது இதன் மூலம் உங்கள் டிக்கட்டை லைட் வெர்ஷன் என்னும் அறிவிப்பு 9.30 முதல் 12 மணி வ்ரை வருகிறதா என்று பாருங்கள் வர வில்லை என்றால் ரெஃபர்ஷ் செய்து பின்பு ஆரம்பிக்கவும் இதன் மூலம் 10 லட்சம் கப்பாசிட்டி 80 லட்சம் ஆகி 60 – 65,000 டிக்கட்கள் எளிதாக செய்ய முடியும் வித் அவுட் நோ பிராப்ளம்ஸ். இந்த நேரத்தில் விளம்பரம் / டூர் பேக்கேஜ் லொட்டு லொசுக்கு எதுவுமே வேலை செய்யாததால் இதன் டிராஃபிக் ஸ்மூத்தாய் இருக்கும் ஆல் தி பெஸ்ட் மக்களே……………..Human ERROR is the main cause for IRCTC bookings – Avoid smartly
Let’s learn something

Wednesday 2 April 2014

மினிமம் பேல்ன்ஸ் இல்லாமல் போனால் அபராதம் போடக் கூடாது!

சேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாமல் இருந்தாலும் எஸ்பிஐ அபராதம் ஏதும் விதிப்பதில்லை. அதே வேளையில் ஐஓபி, கனரா வங்கி உள்ளிட்ட பிற பொதுத்துறை வங்கிகள் ரூ.20 அபராதம் விதிக்கின்றன.ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.10,000 வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் ரூ.750 அபராதம் விதிக்கின்றன. இவ்விரு வங்கிகளின் கிராமப்புற வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.5,000 தொகையை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்ற நிலையில் சேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
A cashier counts currency notes as customers wait inside a bank in Hyderabad
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையை நேற்று வெளியிட்ட ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், இந்த உத்தரவை பிறப்பித்தார்.அதில்,””சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் சூழ்நிலையையும், அவர்களது கஷ்டத்தையும் புரிந்துகொள்ளாமல் வங்கிகள் தங்களுக்கு சாதகமாக அபராதம் விதிக்கக் கூடாது.வாடிக்கையாளர்கள் கணக்கில் வங்கிகள் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச இருப்புத் தொகையை எட்டிய பிறகு, வங்கிச் சேவையைத் தொடர அனுமதிக்கலாம். இதேபோல பரிவர்த்தனை நடக்காத வங்கிக் கணக்குகள் மீதும் இதுபோன்ற அபராதம் விதிக்கக் கூடாது” என்றார் ரகுராம் ராஜன
.